News March 27, 2025
1 லட்சம் பரிசு பெற்ற சிவகங்கை மாணவி

சிவகங்கை மாவட்டத்தில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முக ஷாலினிக்கு பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை செயலர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Similar News
News April 2, 2025
திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க.!

சிவகங்கை பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிவகங்கையில் ஒரு கோயில் எழுப்பி அந்த கோயிலுக்கு சசிவர்ணேஸ்வரர் கோயில் என பெயர் சூட்டினார். இந்த கோயிலில் உள்ள துர்க்கையம்மன் இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனை கிடத்திய நிலையில் காட்சி அளிக்கும். இந்த ஆலயத்தில் சுகப்பிரசவமாக, திருமணத் தடை நீங்க, மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு துர்க்கையம்மனிடம் வேண்டினால் அது நடக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
News April 2, 2025
அக்னி குண்டத்தில் நிலை தடுமாறி விழுந்த பக்தர்

சிவகங்கை மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு அருகேஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழாநடைபெற்றது. 6 மாத பெண் குழந்தையுடன் தீ மிதிக்க வந்த பக்தர் அக்னி குண்டத்தில் நடந்து செல்லும்போது தடுமாறி குழந்தையுடன் கீழே விழுந்தார். தீமிதி திருவிழாவில் குழந்தையுடன் விழுந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.
News April 2, 2025
சிவகங்கையில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் ரெடிமேட்ஸ் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர் காலிபணியிடங்கள் உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . அதேபோல இலவச உணவு மற்றும் தங்கும் இடம், ஊக்கத்தொகை, ESI , PF வசதிகளும் உள்ளது. <