News November 4, 2025

1% பணக்காரர்களின் சொத்து 62% ஆக உயர்வு

image

இந்திய மக்கள் தொகையில் 1% உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 23 ஆண்டுகளில் 62%ஆக உயர்ந்துள்ளதாக ஜி20 அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சீனாவில் 54% ஆக உள்ளது. மேலும், உலகளவில் உள்ள 1% பெரும் பணக்காரர்கள், கடந்த 23 ஆண்டுகளில் 41% புதிய சொத்துக்களை சேர்த்துள்ளனர். அதேசமயத்தில், உலகின் பாதி மக்கள் வெறும் 1% மட்டுமே சொத்துக்களை சேர்த்துள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?

Similar News

News November 5, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 5, ஐப்பசி 19 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News November 5, 2025

எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத கொடூரம்: சிபிஆர்

image

கோவை கொடூரத்தில் பாதிக்கப்பட பெண்ணுக்கு, நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உண்மையிலேயே எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரமானது கொங்கு மண்ணில் நடந்தது தாங்க முடியாத வேதனையை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவது போலீசின் பொறுப்பு என்று சிபி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

News November 5, 2025

கோவை கொடூரத்தால் மிகுந்த வேதனை: கனிமொழி

image

கோவை கொடூரத்தில், குற்றம் செய்தவர்களை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!