News March 25, 2025
1 மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு

சென்னையில், கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 7 இடங்களில் செயின் பறிப்புகள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி MRC மைதானம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு, வேளச்சேரி டான்சி நகரில் 2 இடங்களில் செயின் பறிப்பு, திருவான்மியூர் இந்திரா நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு என காலை 6 முதல் 7 மணிக்குள் 15 சவரன் நகைக்குள் மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 12, 2025
சென்னையில் 12 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

சென்னை மாவட்டத்தில் உள்ள 40.04 லட்சம் வாக்காளர்களில், 70% பேர் மட்டுமே வாக்காளர் திருத்தப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் வாக்காளர்களிடமிருந்து விவரங்கள் பெறப்படாததால், அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். படிவம் சமர்ப்பிக்க டிசம்பர் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
சென்னை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சென்னை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News December 12, 2025
சென்னை: சிறுநீர் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!

சென்னை பாரிமுனை பாலகிருஷ்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (45). லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று இரவு பாலகிருஷ்ணா மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, ஆபிரகாம் உடல் இடது புறம் முழுதும் தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


