News June 26, 2024
0.001% பேரிடம் 17 சதவீத இந்திய செல்வம்

உலகளவில் ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள 90% லட்சாதிபதிகள் உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவின் மொத்த செல்வத்தை 1% பணக்காரர்கள் வைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, 0.001% மக்கள் 17% செல்வத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. லட்சாதிபதிகள் பட்டியலில் பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை என்பது வேதனை.
Similar News
News December 28, 2025
செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 28, 2025
நிலவின் இந்த ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?

நிலவு என்றால் அதன் பிரகாசமே நினைவுக்கு வரும். ஆனால், நிலவு காடுகளை விட மங்கலானது. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் ஒரு மிரர் மட்டுமே நிலவு! 450 கோடி ஆண்டுகளுக்கு முன் ‘தியா’ என்ற கோள் பூமி மீது மோதியதில் சிதறிய துண்டுகள் சேர்ந்தே நிலவாக மாறியுள்ளது. இதன் ஒரு பக்கம் தடிமனாகவும், ஒரு பக்கம் மெலிந்தும் இருக்கும். நிலவில் காணப்படும் மரியா என்ற கரும்புள்ளிகள், எரிமலை குழம்புகள் குளிர்ந்து உருவான தழும்புகள்!
News December 28, 2025
தங்கம் விலை ₹8,240 தடாலடியாக மாறியது

2024-ல் தங்கம் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட் என பலரையும் முணுமுணுக்க வைத்துள்ளது இந்தாண்டின் தங்கம் விலை உயர்வு. குறிப்பாக இம்மாதம் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி ₹12,070-க்கு விற்பனையான 22 கேரட் 1 கிராம் தங்கம் இன்று ₹13,100-க்கு விற்பனையாகிறது. 1 சவரன் தடாலடியாக ₹8,240 உயர்ந்து ₹1,04,800-க்கு விற்பனையாகிறது. இது வரும் நாள்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாம்.


