News January 15, 2026
0% மார்க் எடுத்தாலும் டாக்டருக்கு படிக்கலாம்!

NEET PG 3-ம் கட்ட கலந்தாய்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 800 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவு, EWS- 7% (103 மதிப்பெண்கள்), SC/ST/OBC – 0% (-40 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்ளதால் -40 மதிப்பெண்கள் எடுத்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். நாடு முழுவதும் 18,000 முதுகலை மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்கவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
பணமழை கொட்டும் 3 ராசிகள்

வரும் பிப்.16-ல் மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருப்பதால், 3 ராசியினருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசப் போகிறதாம். *மகரம்: தொழிலில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர். *ரிஷபம்: வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு. கொடுக்கல் வாங்கல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். *மேஷம்: நகை, வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. நீண்ட காலமாக கிடப்பில் இருந்த பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
News February 7, 2026
BREAKING: இந்தியாவை திணற வைத்த USA

டி20 உலகக்கோப்பையில் பவர்பிளேயிலேயே இந்தியாவுக்கு USA அதிர்ச்சி அளித்துள்ளது. முதல் ஓவரில் இருந்தே சிறப்பாக பந்துவீசிய USA, அபிஷேக் சர்மா(0), இஷான் கிஷன்(20) திலக் வர்மா(25), ஷிவம் துபே(0) என அடுத்தடுத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இதனையடுத்து கேப்டன் சூர்யகுமார் மற்றும் ரிங்கு சிங் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
News February 7, 2026
கூட்டணி பற்றிய செய்திகளில் உண்மையில்லை: தவெக

தவெக காங்கிரஸுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தொடர்ந்து செய்தி வருகிறது. இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் தவெகவை பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். தங்களின் கூட்டணிப் பேரங்களை உயர்த்திக் கொள்வதற்காக பல கட்சிகள் உண்மையற்ற தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


