News July 13, 2024
₹95 திட்டத்தில் 4ஜிபி டேட்டா, இலவச OTT

கட்டண உயர்வை அமல்படுத்திய போதிலும், சில சலுகைகளையும் சந்ததாரர்களுக்கு வோடபோன் ஐடியா தொடர்ந்து அளிக்கிறது. மிக குறைந்த விலையில், ₹95 திட்டத்தில் 4 ஜிபி டேட்டா, sony Liv OTT இலவச சேவையை வழங்குகிறது. டேட்டாவுக்கான வேலிடிட்டி 14 நாள்களும், sony liv OTT வேலிடிட்டி 28 நாட்களும் அளிக்கப்பட்டுள்ளன. இலவசமாக OTT பார்க்க விரும்புவோருக்கு இதுசிறந்த திட்டம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 21, 2025
கூட்டணி பேச்சுவார்த்தை: காங்., குழு அமைப்பு?

2026 தேர்தலில் திமுக – காங்., கூட்டணி உறுதியான நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்., தலைமை குழு அமைத்துள்ளதாம். கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சுரே ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 18 இடங்களில் வென்றது. 2026-ல் காங்., எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்?
News November 21, 2025
முடியாததை முடித்துகாட்டிய நாடுகள்

மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான திட்டங்களை பல வருடங்களாக செயல்படுத்த முடியாமல் தவிக்கும் நாடுகளுக்கு மத்தியில் சில நாடுகள் அசால்ட்டாக செய்து முடித்துள்ளன. இந்த நாடுகள், தைரியமான முடிவுகளை உறுதியாக கடைபிடித்ததன் மூலம் வெற்றியடைந்துள்ளன. அவை, எந்தெந்த நாடுகள், என்னென்ன செய்துள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 21, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தக நேர முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 89.46 ஆக சரிந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில், இது 0.86% சரிவாகும். அதாவது, ஒரே நாளில் 67 பைசா சரிந்துள்ளது. டாலரின் தேவை அதிகரித்தது, ரிசர்வ் வங்கியின் ஆதரவு குறைந்தது போன்றவை இச்சரிவுக்கு காரணம். ரூபாய் மதிப்பு சரிவால், நமது இறக்குமதி செலவுகள் உயரும்.


