News January 16, 2026
₹85 கோடிக்கு சூர்யா படத்தை வாங்கிய நெட்ஃபிலிக்ஸ்

‘சூர்யா 46’ படத்தின் ஓடிடி உரிமத்தை ₹85 கோடிக்கு நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் கடைசி படமான ‘ரெட்ரோ’, பாக்ஸ் ஆஃபிசில் சரியாக வசூல் செய்யவில்லை என்றாலும், அவரது கரியரில் அதிக தொகைக்கு விற்பனையான படமாக இது அமைந்துள்ளது. மேலும், ‘லக்கி பாஸ்கர்’ இயக்குநர் வெங்கி அட்லுரி இப்படத்தை இயக்குவதும் இவ்வளவு தொகைக்கு விற்பனையானதற்கு ஒரு காரணமாக உள்ளது.
Similar News
News February 10, 2026
பாம்பாக மாறிய பெண்.. படுக்கையில் அதிர்ச்சி

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில், அவர் நாகினியாக மாறிவிட்டதாக பெற்றோர் கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு அந்த பெண்ணின் படுக்கையில் கிடந்த 5 அடி நீள பாம்புத் தோலே காரணம் என தெரியவந்தது. ஊரே பீதியில் உறைந்த நிலையில், தனது காதலனுடன் தப்பியோடுவதை திசைதிருப்பும் முயற்சியாக அந்தப் பெண் வேண்டுமென்றே பாம்புத் தோலை விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News February 10, 2026
முகத்தில் முடி வளருதா? கவலை வேண்டாம் TRY THIS..

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் முடிகளை அகற்றுவதில் சர்க்கரை + தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. ➤இதற்கு 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் சர்க்கரையை எடுத்துகொள்ளுங்கள் ➤அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும் ➤பிறகு சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவுங்கள் ➤வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்துவந்தால் முகத்தில் உள்ள முடி முற்றிலுமாக உதிர்ந்துவிடும். SHARE.
News February 10, 2026
ஸ்டாலினுக்கு வார்னிங் கொடுத்த செல்வப்பெருந்தகை

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக நாளை ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில் ராகுல் உடனான சந்திப்புக்கு பின் பேசிய அவர், திமுக உடனே பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும் என்றார். தொகுதி பங்கீட்டை தாமதப்படுத்தினால், அது மகாராஷ்டிரா, பிஹார் போல இங்கும் தேர்தல் முடிவை பாதிக்கலாம் என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.


