News May 14, 2024
ஒரே நாளில் ₹8000 கோடி காலி

அமெரிக்க பங்குச்சந்தையில் GameStop என்ற பங்கின் விலை நேற்று ஒரே நாளில் 74% உயர்ந்ததால் Short Sellers சுமார் $1 பில்லியன் (₹8000 கோடி) நஷ்டத்தை சந்தித்துள்ளனர். Short Sellers என்றால் பங்கை காலையில் அதிக விலைக்கு விற்றுவிட்டு, மாலையில் குறைந்த விலைக்கு வாங்குவார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக பங்கின் விலை உயரும்போது அவர்கள் நஷ்டமடைகின்றனர். குறிப்பாக, GameStop மாதிரியான நிகழ்வுகள் அபூர்வமானவை.
Similar News
News March 30, 2026
ரோஹித் 2.0.. எச்சரித்த கும்ப்ளே

ரோஹித் தனது 2.0 அவதாரத்தில் களமிறங்கியுள்ளதாக அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக ஆடிய விதம் அவரது உச்சக்கட்ட பார்ம் நாள்களை தனக்கு நினைவூட்டியதாகவும், மற்ற அணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், வருண், சுனில் & முஸராபானி ஆகியோர் பந்தில் சிக்ஸர் அடிப்பது எளிதல்ல; ஆனால் ரோஹித் அதை எளிதாக செய்ததாக பாராட்டினார்.
News March 30, 2026
திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல, காமெடியன்: அன்புமணி

திமுகவின் தேர்தல் அறிக்கை யாருக்கும் பயன்படாத ஆணிதான் என அன்புமணி விமர்சித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல, காமெடியன் என்று சாடிய அவர், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை என்ற மோசடியை யாரும் நம்ப மாட்டாா்கள் எனத் தெரிவித்தார். மேலும், நீட் என்ற பெயரை தவிர்த்துவிட்டு, நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல் என திமுக வாக்குறுதி அளித்ததாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
BIG NEWS: விஜய் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா!

வேட்புமனு தாக்கலின் போது தனது சொத்து விவரம் குறித்து பிரமாணப் பத்திரத்தில் விஜய் அளித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவரின் அசையும், அசையா சொத்து மதிப்பு ₹520 கோடி என தெரியவந்துள்ளது. வங்கிக் கணக்குகளில் ₹278 கோடி, 110 சவரன் நகைகள், ₹1 கோடி மதிப்பிலான வைரங்கள், 5 சொகுசு கார்கள் உள்ளதாம். மேலும், நீலாங்கரை, சோளிங்கர், சாலிகிராமத்தில் வீடு, வணிக வளாகங்கள் இருக்கிறதாம்.


