News April 25, 2025
பங்குச்சந்தையில் ₹8 லட்சம் கோடி நஷ்டம்

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நிலவுவதால், பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 207 புள்ளிகள் சரிந்து 24,039 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 588 புள்ளிகளை இழந்தது. இன்று ஒரே நாளில் மட்டும், முதலீட்டாளர்கள் சுமார் ₹8 லட்சம் கோடி வரை இழந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ ஏப்ரல் 29 – சித்திரை- 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: தேய்பிறை
News April 26, 2025
சுப்ரீம் கோர்ட் கதவை தட்டிய டாஸ்மாக்

டாஸ்மாக் அலுவலகத்தில் ED சோதனை நடத்தலாம் என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, டாஸ்மாக் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. கடந்த மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்ட் நடத்திய ED, ₹1000 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது. அதனை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சோதனை நடத்தியதில் தவறில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
News April 26, 2025
புதுச்சேரியில் மதுபான விலை உயருகிறது

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-26ம் ஆண்டு பட்ஜெட் நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், மதுபானம் மீதான கலால் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வால், புதுச்சேரியில் மதுபான விலை கணிசமாக உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி மது விலை குறைவு என்பதால், தமிழகத்தில் இருந்தும் பலர் அதை வாங்கி அருந்துவர். ஆதலால் மது பிரியர்களை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.