News June 11, 2024
தடகள வீரர் மாரியப்பனுக்கு ₹75 லட்சம் ஊக்கத் தொகை

ஜப்பானின் கோபில் நகரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்க பதக்கம் வென்றிருந்தார். அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ₹75 லட்சத்துக்கான காசோலையை தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News November 11, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை சேர்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டிச.15 முதல் அவர்களுக்கும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்னும் 4 நாள்களில் (நவ.15) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முழுவதுமாக நிறைவடையும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்பிறகு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. அதனால், தகுதியான மகளிர் உடனடியாக முந்துங்க. SHARE IT
News November 11, 2025
பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு… சிறிது நேரத்தில்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 243 தொகுதிகளில், 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு இறுதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 6:30 முதல் பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. NDA கூட்டணி ஆட்சி தொடருமா, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது ஓரளவு இந்த கருத்துக் கணிப்பில் தெரிந்துவிடும். முடிவுகளை அறிய வே2நியூஸில் காத்திருங்கள்.
News November 11, 2025
பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.


