News July 10, 2025
₹7000 அபராதம் ரத்து? இந்த மெசேஜ் வந்தா தொட்டுடாதீங்க மக்களே!

ஈரோடு: கடந்த சில நாள்களாக ரூ.7000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள்(Traffic Fines) ரத்து செய்யப்படும் என கூறி ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
ஈரோடு மாவட்டம் : மஞ்சள் விலை நிலவரம்

ஈரோட்டில் இன்று 10 மஞ்சள் விலை நிலவரம் பெருந்துறையில் விராலி
ரூ.8,878 – 13,539 வரையும், கிழங்கு ரூ.8,556 – 12,365 வரையும், ஈரோடு விராலி ரூ.9,299 – 13,859 வரையும், கிழங்கு ரூ.7655 – 12,589 வரையும்,
ஈரோடு சொசைட்டி விராலி ரூ.9,599 – 13,604 வரையும்,
கிழங்கு ரூ.8,255 – 12,312 வரையும்,
விராலி ரூ.10,602 – 12,906 வரையும்,
கிழங்கு ரூ.10,502 – 12,042 வரையும் மஞ்சள் விற்பனையானது.
News July 10, 2025
கராத்தே, சிலம்பம் உடற்கல்வி பயிற்சியாளர்கள் வேலைவாய்ப்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைந்துறை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகளுக்கு தற்காப்பு மற்றும் விளையாட்டு பயிற்சி அளிக்க கராத்தே,சிலம்பம் மாதம் ரூ.9000 மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ரூ 15 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சியாளர் நியமனம் செய்ய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (பெண்கள் மட்டும்) விண்ணப்பங்களை சமூகநலத்துறை அலுவலகத்தில் 15.07.2025-க்குள் சமர்ப்பிக்கவும்.
News July 10, 2025
ஈரோடு: இந்திய அஞ்சல் துறையில் ரூ.15 லட்சம் வரை..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். (<<17014307>>மேலும் தகவலுக்கு<<>>)