News April 27, 2025

₹7.5 கோடி.. உலகின் பணக்கார பிச்சைக்காரர்..!

image

மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயினுக்கு ₹1.4 கோடி மதிப்பில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அவரது நிகர மதிப்பு ₹7.5 கோடி. 2 கடைகளையும் அவர் வைத்துள்ளார். இவ்வளவு சொத்து சேர்த்தும் பிச்சை எடுப்பதை அவர் நிறுத்தவில்லை. மும்பை ஏர்போர்ட் முன்பு பிச்சையெடுக்கும் அவர், நாளொன்றுக்கு ₹2,000 – ₹2,500 என்ற வகையில் மாதம் ₹60,000 – ₹75,000 வரை வருமானம் ஈட்டுகிறார்.

Similar News

News April 27, 2025

நடிகர் நாகேந்திரன் திடீர் மரணம்.. காரணம் இதுதான்

image

காவல் படத்தை இயக்கியவர், நாகேந்திரன். சில படங்களிலும் இவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நேற்று நாகேந்திரன் திடீரென மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு மாரடைப்பே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இளம் கலைஞர்கள் மரணமடைவது, தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் தான் பாரதிராஜா மகன் மனோஜ், மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2025

நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்

image

சந்தோஷ் தாஸ் என்பவரின் நுரையீரலில் இருந்து 8 cm நீளமுள்ள கத்தியை ஒடிசா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு பெங்களுருவில் கத்தியால் குத்தப்பட்ட தாஸுக்கு சிகிச்சை முடிந்தபின்பும் வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்காக 8 மாதங்களாக சிகிச்சை பெற்ற நிலையிலும் குணமாகவில்லை. இந்நிலையில், சிடி ஸ்கேனில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

விமானத்தில் அசிங்கம் செய்த பெண் பயணி

image

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இருந்து சிகாகோ நோக்கி சென்று கொண்டிருந்த சவுத்வெஸ்ட் விமானத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென ஆடைகளை களைந்த பெண் பயணி ஒருவர், தனது சீட்டிலேயே மலம் கழித்துள்ளார். பெண்ணின் செயலைக் கண்ட சக பயணிகளை அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் இவ்வாறு விநோதமாக நடந்துகொள்ள என்ன காரணம் என்று விசாரணை நடைபெறுகிறது.

error: Content is protected !!