News April 3, 2026

₹7 கோடி சொத்தை இழந்த உதயநிதி

image

2026 தேர்தலில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ₹20.64 கோடி என பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இது 2021-ஐக் காட்டிலும் ₹7 கோடி குறைவாகும். 2021 தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ₹27 கோடி என உதயநிதி குறிப்பிட்டிருந்தார். தற்போது ரெட் ஜெயன்ட் CEO-வாக இருக்கும் மகன் இன்பநிதியின் பெயரை தற்போதைய பத்திரத்தில் குறிப்பிடவில்லை.

Similar News

News April 7, 2026

மாவு பாக்கெட் வாங்கறீங்களா? எச்சரிக்கை!

image

டிபன் செய்ய மிடில்கிளாஸ் மக்களுக்கு ஈஸி ஆப்ஷன், கடையில் விற்கப்படும் தோசை மாவுதான். ஆனால், அது உடல்நலத்தை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அது தரக்குறைவாக இருந்தால் *புட்பாய்சன் -வயிற்றுப்போக்கு, குடல் பிரச்னை *ஜீரண பாதிப்பு *ரத்த சர்க்கரை அதிகரிப்பு *BP அதிகரிப்பு *சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு சிரமம் பார்க்காமல் வீட்டிலேயே மாவரைத்து பயன்படுத்துவதுதான்.

News April 7, 2026

நடிகை சுபாஷினி மரணம்.. தொடரும் சோகம்

image

தமிழ் சீரியல் நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை ராஜேஸ்வரி, குடும்ப பிரச்னையால் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு விபரீத முடிவை எடுத்தார். ‘துர்கா’ சீரியல் நடிகை நந்தினியும் தாயுடன் ஏற்பட்ட பிரச்னையால் உயிரை மாய்த்துக் கொண்டார். அவ்வரிசையில் ‘கயல்’ சீரியல் நடிகை<<19582386>> சுபாஷினியும்<<>> தவறான முடிவை எடுத்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

News April 7, 2026

காரைக்குடி தொகுதியில் சீமானுக்கு புது சிக்கல்!

image

2021 தேர்தலில் நாதகவுக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் லோக்சபா தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவுக்கு கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சீமான் போட்டியிடும் காரைக்குடியில், இந்திய குடியரசு கட்சியின் கருப்பையாவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வாக்களர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கலாம்.

error: Content is protected !!