News November 15, 2024
பட்டதாரிகளுக்கு மாதம் ₹5 ஆயிரம்: இன்றே கடைசி தேதி

மத்திய அரசின் ‘PM Internship’ திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.15) கடைசி நாள். இதன் மூலம், 500 நிறுவனங்களில் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கான வேலைவாய்ப்பை அரசு வழங்குகிறது. 10-ஆம் வகுப்பு, ஐடிஐ, Degree படித்து 21 – 24 வயதில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹5 ஆயிரம் உதவித்தொகை அரசு வழங்குகிறது. https://pminternship.mca.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
Similar News
News March 5, 2026
திருச்சி வரும் மோடி; ஏற்பாடுகள் தீவிரம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்திருச்சியில் வரும் 11ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிலையில் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையம் அருகே பந்தல்கால் நட்டு மாநாட்டுக்கான இடத்தை தயாா்படுத்தும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இந்நிகழ்வில் மத்திய அமைச்சா் எல். முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
News March 5, 2026
70 தொகுதிகளா? பாஜகவின் பிளானுக்கு EPS பதில்

மொத்தமாக 70 தொகுதிகளை கொடுங்கள், நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துவிடுகிறோம் என்று பியூஷ் கோயல், EPS-யிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு 25 தொகுதிகள், மற்ற கட்சிகளுக்கு தாங்களே சீட் ஒதுக்கீடு செய்வதாக EPS கூறிவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முரண்பாட்டாலேயே அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குறைந்தது பாஜகவுக்கு 30 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாம்.
News March 5, 2026
ஏலக்காய் விலை ஒரே நாளில் குறைந்தது

போர் பதற்றத்தால், அரபு நாடுகளுக்கான ஏலக்காய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் 1 கிலோ ஏலக்காய் ₹2,400-லிருந்து ₹2,250 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, இடுக்கி ஏலக்காய் சந்தைக்கு ஒரு நாளில் 1 லட்சம் கிலோ அளவுக்கு வரத்து இருக்கும் நிலையில், கிலோவுக்கு ₹150 வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். வர்த்தகம் ₹1.50 கோடி வரை குறைந்துள்ளதால் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.


