News May 28, 2024

மறுமதிப்பீட்டுக்கு ₹505, மறுகூட்டலுக்கு ₹205 கட்டணம்

image

+1 மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பப் படிவத்தினை பதவிறக்கம் செய்து, ஜூன் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறுமதிப்பீடுக்கு பாடம் ( ஒவ்வொன்றிற்கும் ) ₹505 செலுத்த வேண்டும். மறுகூட்டல்-II -க்கு உயிரியல் பாடம் மட்டும் ₹305, ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ₹205 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Similar News

News March 3, 2026

குவைத், ஓமனில் இந்தியர்களின் நிலை என்ன? PM ஆலோசனை

image

ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், குவைத் மற்றும் ஓமன் நாட்டு தலைவர்களுடன் PM மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அங்குள்ள அசாத்தியமான சூழல் குறித்து கேட்டறிந்த மோடி, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசித்துள்ளார். ஏற்கெனவே பஹ்ரைன் மற்றும் அபுதாபி இளவரசருடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது ஈரானின் தாக்குதலுக்கு அவர் <<19276042>>கண்டனங்களையும் <<>>பதிவு செய்திருந்தார்.

News March 3, 2026

வங்கி கணக்கில் ₹2,000 பணம்.. வந்தாச்சு HAPPY NEWS

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹2,000) எப்போது கிடைக்கும் என்ற விவசாயிகளின் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மார்ச் 14-க்குள் டெபாசிட் செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை KYC அப்டேட் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் பணம் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. pmkisan.gov.in இணையதளத்தில் Know Your Status மூலம் உங்களுக்கு பணம் வருமா என்பதை அறியலாம்.

News March 3, 2026

ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் படுகொலை

image

இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் ஏவுகணை தாக்குதலில் ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரான சையத் மஜீத் எப் அல்-ரேசாவும் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல், US-ன் நடத்திய முதல்நாள் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் <<19266093>>அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டார்<<>>. இதனையடுத்து பதவியேற்ற மறுநாளிலேயே சையத் மஜீத் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஈரான் அரசு இதனை இன்னும் உறுதிபடுத்தவில்லை.

error: Content is protected !!