News August 29, 2025
மகளிருக்கு ₹5,000.. உடனே இதை பண்ணுங்க

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வணிக ரீதியிலான கிரைண்டர் வாங்க தமிழக அரசு உதவி வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சென்னை உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்கள் தற்போது அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி, கிரைண்டர் விலையில் மானியமாக 50% (அ) ₹5,000 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் செப். 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
10 வாரங்களில் கதையை மாற்றிய இந்தியா!

கடந்த ஜூன் 26-ம் தேதி சீனாவில் நடைபெற்ற SCO பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டு பிரகடனத்தில் பஹல்காம் தாக்குதலை கண்டிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் ராஜ்நாத் சிங்கும் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால், இன்று அதே SCO மாநாட்டு பிரகடனத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தானும் கையெழுத்திட்டிருந்தது. இது இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.
News September 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 2, 2025
ஆகஸ்ட்டில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ஆகஸ்ட் மாதத்தில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஆகஸ்ட்டை விட(₹1.75 லட்சம் கோடி) 6% அதிகமாகும். தமிழகத்தை கணக்கிட்டால் கடந்த ஆண்டை விட 9% அதிகம் வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. தீபாவளியன்று ஜிஎஸ்டி குறைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.