News October 14, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு புதிய தகவல்

image

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, மகளிர் உரிமைத் தொகை பெற்று வருவோருக்கு இந்த தொகை கிடைக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இதற்கும் பொங்கல் பரிசிற்கும் தொடர்பில்லை என்பதால், அவர்களுக்கும் பணம் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ₹5,000 கிடைப்பது சந்தேகம்தான். SHARE IT

Similar News

News October 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 489 ▶குறள்: எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். ▶பொருள்: கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

News October 15, 2025

ரோஹித், கோலி ஓய்வு குறித்து BCCI விளக்கம்

image

ஆஸி.,க்கு எதிரான ODI தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதுவே ரோஹித், கோலிக்கு கடைசி தொடராக இருக்கும், அதன்பிறகு ODI-ல் ஓய்வு அளிக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார். வீரர்கள் தான் ஓய்வு குறித்து முடிவு செய்வார்கள் எனவும், இந்த 2 வீரர்களின் அனுபவம் இந்திய அணிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 15, 2025

‘டியூட்’ படத்திற்காக தூக்கத்தை தொலைத்த நடிகை

image

‘டியூட்’ படத்தில் தனக்கு பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருப்பதாக நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால், இரவில் தூங்காமல் வசனங்களை மனப்பாடம் செய்து பயிற்சி எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், தனது நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!