News October 9, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு புதிய தகவல்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க TN திட்டமிட்டுள்ளதாக அண்மையில் செய்தி பரவியது. அதில், புதிய அப்டேட்டாக யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரிசி, சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ₹5,000 கிடைக்கும் என்றும், அடையாளத்திற்காக கார்டு வைத்திருப்போருக்கு பணம் கிடைக்காது எனவும் சொல்லப்படுகிறது. தீபாவளியையொட்டி இதற்கான அறிவிப்பு வெளியாகுமாம். SHARE IT.
Similar News
News December 9, 2025
புத்தர் பொன்மொழிகள்

*நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு. *நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.
News December 9, 2025
கொரோனா பற்றி கூறியவரை பழிவாங்க துடிக்கும் சீனா

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியதாக உலகிற்கு சொன்னதால், தன்னை பழிவாங்க சீனா முயற்சிப்பதாக, வைரலாஜிஸ்ட் லி-மியாங் யான் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக, சீனாவில் உள்ள தனது பெற்றோர், கணவரை பிடித்து வைத்துக் கொண்டு, தன்னை நாடு திரும்ப சொல்லி அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து உலகிற்கு சொன்னதும், யான் US-ல் தஞ்சம் புகுந்தார்.
News December 9, 2025
கோல்டன் குளோப்ஸ் ஃபீவர் ஸ்டார்ட் ஆனது!

2026 கோல்டன் குளோப்ஸ் பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த இயக்குநர், நடிகர் என 9 பிரிவுகளில் டிகாப்ரியோவின் ‘One Battle After Another’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நார்வே படமான ‘Sentimental Value’ 8, ஹாலிவுட் படமான ‘Sinners’ 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ம் தேதி, ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் இந்த சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.


