News January 4, 2026
₹5,000 தள்ளுபடி.. HAPPY NEWS!

LIC-யில் நீங்கள் எடுத்த தனிநபர் காப்பீட்டுக்கான பிரீமியத்தை கட்டாமல் விட்டுட்டீங்களா? இதனை புதுப்பிக்க சலுகைகளோடு புதிய திட்டத்தை 2 மாதத்திற்கு அந்நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி அபராத கட்டணத்தில் 30% (அ) அதிகபட்சம் ₹5,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. மார்ச் 2-ம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த தள்ளுபடியால் பல லட்சம் பேர் பலனடைவார்கள் என LIC தெரிவித்துள்ளது. அனைவரும் இதை SHARE பண்ணுங்க.
Similar News
News January 24, 2026
அப்துல் கலாமின் பொன்மொழிகள்

*கனவு என்பது தூங்கும் போது காண்பதல்ல, உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு. *உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை மாற்றும். *நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இரண்டும் தோல்வி எனும் நோயைக் கொல்ல சிறந்த மருந்து. *ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம். *சூரியனைப் போல நீங்கள் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள்.
News January 24, 2026
வசந்த குமாரி ருக்மணி வசந்த்

ருக்மணி வசந்த் வெகு நாள்கள் கழித்து சேலையில் இருக்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். காந்தாரா படம் வெளிவந்தபோது, அதில் சேலையில் நடித்திருந்ததால், தொடர்ந்து சேலை போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமீபத்திய போட்டோஸில் அவர், வசந்தம் தழுவிய இலையாக, இலைகளுக்குள் ஒளிந்த சூரிய ஒளியாக, பச்சை நிறமே பச்சை நிறமே என பிரகாசமாக ஜொலிக்கிறார்.
News January 24, 2026
ஐபோன் 18 ப்ரோ.. விலை என்ன தெரியுமா?

ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ஐபோன் 18 ப்ரோ மற்றும் புரோ மேக்ஸில், டைனமிக் ஐலேண்டிற்கு பதிலாக திரைக்குக் கீழ் ஒரு புதிய பகுதி இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அம்சங்களுடன் இந்தாண்டு செப்டம்பரில் வர வாய்ப்புள்ளது. மேலும், இதன் விலை 18 ப்ரோ ₹1,34,900 ஆகவும், புரோ மேக்ஸ் ₹1,49,900 ஆகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


