News January 3, 2026
₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு CLARITY

2026 மார்ச் முதல் ₹500 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற தகவல்
SM-ல் பரவி வருகிறது. இந்நிலையில், ₹500 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்படும் என பரவும் செய்தி பொய்யானவை எனவும், இதுகுறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
JUST IN மதுரை: பிரபல ரவுடி என்கவுண்டர்!

மதுரை பிரபல ரவுடி வெள்ளை காளி மீது கடந்த 24ம் தேதி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்து சென்றபோது எஸ்.ஐ சங்கரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால், போலீசாரால் கொட்டு ராஜா என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
News January 27, 2026
ஜன நாயகன் ரிலீஸ்.. இனிப்பான செய்தி வந்தாச்சு!

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. ஒருவேளை ஜன நாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் தர வேண்டும் என்று CBFC-க்கு சென்னை HC உத்தரவிட்டால், சான்றிதழ் பெறும் வேலைகள் ஓரிரு நாள்களில் முடிந்துவிடும். இதனால், படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
News January 27, 2026
BREAKING: ரவுடி அழகுராஜா என்கவுண்டர்

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அழைத்து வரும்போது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் தொடர்புடைய அழகுராஜா என்ற ரவுடியை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூரில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற போலீசார் அவரை அழைத்து சென்றபோது, அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற அழகுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.


