News April 24, 2024
தொழிலதிபரிடம் இணைய வழியில் ₹5.2 கோடி மோசடி

அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட பெங்களூருவை சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் இணைய மோசடியில் ₹5.2 கோடியை இழந்துள்ளார். வாட்ஸ்ஆப் மூலம் அவரைத் தொடர்புகொண்ட ஒரு கும்பல், பங்குச் சந்தையில் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசையைத் தூண்டியுள்ளனர். பின்னர் bys-app.com என்ற லிங்க்கை அனுப்பி, ₹5.2 கோடி முதலீடு செய்ய வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.
Similar News
News January 16, 2026
திண்டுக்கல்: குழந்தை வரம் பெற இங்கே போங்க

திண்டுக்கல் வெள்ளி மலை உச்சியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் தங்கி, தீர்த்தகிணற்றில் நீராடினால், பிள்ளைபேறு கிடைக்கும். அதுமட்டுமல்லாது நோய்வாய்ப்பட்டவர்கள் மனஉளைச்சலில் தவிப்பவர்களுக்கு, இக்கோயில் தங்கி முருகனை வழிப்பட்டால் நலம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மற்ற பக்தர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க
News January 16, 2026
BREAKING: தங்கம் விலை குறைந்தது

மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜன.16) தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,230க்கும், சவரன் ₹1,05,840-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 வாரத்தில் சவரனுக்கு ₹5,000 வரை உயர்ந்த தங்கம், இன்று குறைந்துள்ளதால், பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News January 16, 2026
யாருடன் கூட்டணி: ராமதாஸ் புதிய ஸ்கெட்ச்

தொகுதி எண்ணிக்கையைவிட, ராமதாஸை சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான், அதிமுக கூட்டணியில் அன்புமணி (பாமக) இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராமதாஸ் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகளை விட, கூடுதலான தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால் திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் ரெடியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


