News February 28, 2026

₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்கும் அரசு

image

பெண்களே, தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா? உங்களுக்காகவே ₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் Lakhpati didi திட்டம். சுய உதவிக் குழுவில் இருப்பவர்கள், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு, அருகில் இருக்கும் SHG அலுவலகத்தையோ அல்லது பஞ்சாயத்து ஆபீசையோ அணுகுங்கள். அனைத்து பெண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

Similar News

News March 1, 2026

சங்கீதாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

image

விஜய்யிடம் பணம் பறிக்கும் நோக்கில் சங்கீதா விவாகரத்து கோருவதாக சிலர் SM-ல் அவதூறு பரப்புகின்றனர். ஆனால், பல ஆண்டுக்கு முன்பு லண்டனுக்கு இடம்பெயர்ந்த சங்கீதா, அங்குள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர் என்றும் அவரது சொத்து மதிப்பு ₹400 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாலேயே சங்கீதா விவாகரத்து கோரியிருப்பதாக அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.

News March 1, 2026

போரில் சிக்கித் தவிக்கும் 80 லட்சம் இந்தியர்கள்

image

US, இஸ்ரேல் – ஈரான் போரினால் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் 80 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. UAE-35.5 லட்சம், சவுதி அரேபியா-24.6 லட்சம், கத்தார்-8.4 லட்சம், குவைத்-9.9 லட்சம், ஜோர்டன்-17,000, இஸ்ரேல்-20,000, ஈரான்-10,000 இந்தியர்கள் உள்ளனர். இந்தியர்களை மீட்க தூதரக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், போர் நிலவரத்தை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து வருகிறது.

News March 1, 2026

நேதாஜி பொன்மொழிகள்!

image

*வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம் * கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் *உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே *வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது *வரலாற்றில் எந்த உண்மையான மாற்றமும் விவாதங்களால் அடையப்படுவதில்லை.

error: Content is protected !!