News November 15, 2025
₹44,900 சம்பளம், மத்திய அரசு வேலை: APPLY NOW!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 18- 27. கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி. சம்பளம்: ₹44,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16. ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News November 15, 2025
‘அம்மா நான் சாகப் போறேன்.. நீங்க சந்தோஷமா இருங்க’

‘அண்ணா இப்போது நீ மகிழ்ச்சியாக இருப்பாய் அல்லவா, நன்றாக படி. நான் இந்த வாழ்வில் சோர்வடைந்துவிட்டேன். அம்மா, நான் போகிறேன். அம்மா, அப்பா சந்தோஷமாய் இருங்க’. குஜராத்தில் தற்கொலை செய்துகொண்ட 6-ம் வகுப்பு மாணவியின் உருக்கமான கடைசி வரிகள் இவை. வீட்டில் தூக்கிட்ட மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது பெரும் சோகம். சிறுமியின் இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.
News November 15, 2025
வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 1GB/டே.. அரசின் PM WANI திட்டம்!

இணையவசதி என்பது அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள நிலையில், நாட்டின் அனைத்து மக்களும் இணையவசதி பெற, PM WANI என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. சிறு கடைகளையும் மக்கள் பயன்பெறும் வகையில் Wi-Fi Hub-ஆக மாற்றுவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 150 Mbps வேகத்தில் 1GB/ day வழங்கப்படுகிறது. PM WANI ஆப்பை டவுன்லோட் செய்து எளிதில், இந்த திட்டத்தில் சேரலாம்.
News November 15, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. இன்று முதல் அறிவிப்பு

பொங்கல் பரிசு வழங்கும் பணியை தமிழக அரசு இப்போதே தொடங்கிவிட்டது. நவ.15 முதல்(இன்று) ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்தார். இதனையடுத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கத் தொடங்கியுள்ளனர். மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை குறித்தும் அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.


