News April 4, 2025

பசு சாணம் மூலம் ₹400 கோடி வருமானம்!

image

உலகளவில் பசு சாணத்திற்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பசு சாணம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில், பனை மரங்களை வளர்க்க பசுவின் சாணப் பொடியை பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பல பொருட்களைத் தயாரிக்க பசுவின் சாணம் பயன்படுவதால் இதன்மூலம் ₹400 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 10, 2025

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சீருடை கொடுப்பனவு!

image

7 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சீருடை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊழியர் பணியில் சேர்ந்த மாதத்தை கணக்கிட்டு நிதியாண்டில் அவருக்கு சேர வேண்டிய தொகை ஜனவரி, ஜூலை மாதங்களில் வழங்கப்படவுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி பெரும்பாலான மத்திய அரசின் பெரும்பாலான துறை ஊழியர்கள் சீருடை கொடுப்பனவாக ₹20,000 பெறுகின்றனர்.

News April 10, 2025

பாஜக அடுத்த தலைவர் இவரா?

image

அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த தலைவராக வருபவர், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் புது முகமாகவும் இருக்க வேண்டும் என்று டெல்லி தலைமை எதிர்பார்க்கிறதாம். எனவே, அப்போட்டியில் நயினார் நாகேந்திரன் & ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் அடுத்த தலைவராகலாம் என்று பேசப்படுகிறது.

News April 10, 2025

HDFC வங்கி சேவைகள் இயங்காது

image

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, தங்களது சேவைகளை மேம்படுத்த சிஸ்டம் பராமரிப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 12ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை (4 மணி நேரம்) இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில், தங்களது வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு UPI சேவைகள் இயங்காது என்று HDFC அறிவித்துள்ளது. கவனமாக இருங்கள் வாடிக்கையாளர்களே.

error: Content is protected !!