News April 28, 2024

₹4 கோடி பறிமுதல் வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

image

தாம்பரத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடி-யிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர் . பிடிப்பட்ட ₹4 கோடி நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர். ஆனால், இதற்கு நயினார் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

பொது வினா விடை பதில்கள்!

image

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17521026>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஆர்யபட்டா (1975)
2. ஆல்பர்ட் சபின்
3. பிரிட்டன்
4. பிங்க்- பாங்க் அல்லது டேபிள் டென்னிஸ் பால்
5. முதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர்
எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னீங்க!

News August 26, 2025

திமுக முன்னாள் MLA காலமானார்

image

அரவக்குறிச்சி தொகுதியின் முன்னாள் MLA கலிலூர் ரஹ்மான் (78), வயது முதிர்வால் காலமானார். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், 2006-ம் ஆண்டு திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இஸ்லாமியர்களின் அடையாளமாக இருந்த அவர், 2 முறை தேர்வு நிலை பேரூராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News August 26, 2025

ரூட் 2012-ம் ஆண்டே என்னை கவர்ந்துவிட்டார்: சச்சின்

image

டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களில் சச்சின் (15921) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரூட் (13543) உள்ளார். இந்நிலையில் ரூட் திறமை குறித்து ரெடிட் தளத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2012-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அவர் விளையாடிய விதமும், விக்கெட்டை மதிப்பிடும் முறையும் தன்னை கவர்ந்ததாகவும், இங்கி., கேப்டனாக இவர் வருவார் என சகவீரர்களிடம் தான் தெரிவித்ததாகவும் கூறினார்.

error: Content is protected !!