News April 29, 2024
₹4 கோடி பறிமுதல் வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்றபோது, இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மே 2 ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News January 27, 2026
சமஸ்கிருதத்துக்கு ₹2000 கோடி, தமிழுக்கு ₹30 கோடி: அமைச்சர்

கல்வி, 100 நாள் வேலை திட்டம் என பலவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வரவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். சமஸ்கிருத ஆய்வுக்கு ₹2000 கோடி ஒதுக்கும் போது, தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு ₹30 கோடி கூட கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார். முதியோர் ஓய்வூதிய உள்பட பல திட்டங்களுக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News January 27, 2026
எனர்ஜி தரும் ABC ஜூஸ்!

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை சின்ன துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் ஆக்கவும். வடிகட்டத் தேவையில்லை. வேண்டுமெனில் எலுமிச்சைச்சாறு, புதினா சேர்த்துக்கொள்ளலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் A, B1, B2, B3, B4, B5, B6, B9, C, E, K, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் என ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. SHARE IT.
News January 27, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $45.51 (இந்திய மதிப்பில் ₹4,173) உயர்ந்து $5,030.18-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி $3.78 உயர்ந்து $107.08 ஆக உள்ளது. இதனால், இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 30 நாள்களில் மட்டும் $650 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


