News December 21, 2025

₹4 கோடி தராமல் இழுத்தடித்த தயாரிப்பாளர் மீது SK வழக்கு

image

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடிக்க ₹15 கோடி சம்பளம் பேசிவிட்டு, ₹11 கோடி மட்டும் கொடுத்து ₹4 கோடியை தராமல் இழுத்தடிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வரும் வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே கடன் பிரச்னையால் <<18539007>>‘வா வாத்தியார்’<<>> படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் ஞானவேல் ராஜா தவிக்கிறார்.

Similar News

News December 22, 2025

நல்லிணக்கத்தை விதைக்கும் கடவுள் நம்பிக்கை: விஜய்

image

வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வெவ்வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தான் என விஜய் கூறியுள்ளார். கட்சி தொடங்கியதும் கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்ததை பற்றி விளக்கமளித்த அவர், உண்மையான நம்பிக்கைதான் மத நல்லிணக்கத்தை விதைக்கும், மற்றவரின் நம்பிக்கையை மதிக்கக் கற்றுத் தரும் என தெரிவித்துள்ளார். மேலும், நம்பிக்கை இருந்தால் போதும் அனைத்து பிரச்னைகளையும் வெல்லலாம் எனவும் பேசியுள்ளார்.

News December 22, 2025

ஜனவரி 1 முதல் சம்பளம் உயருகிறது!

image

ஜனவரி 1-ம் தேதி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 20% – 35% வரை உயரலாம். கடந்த 2025 நவம்பரில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் & ஓய்வூதியம் 2026 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

News December 22, 2025

BREAKING: அதிரடி கைது.. தமிழகத்தில் அடுத்த சர்ச்சை

image

இலங்கைக்கு ₹6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தியதாக இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஆனந்தராஜ், முருகன் ஆகியோரையும் கைது செய்த போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் விவகாரத்தை இந்து மக்கள் கட்சி கையில் எடுத்த நிலையில், ரவிச்சந்திரன் விவகாரத்தை திமுக விமர்சித்து வருகிறது.

error: Content is protected !!