News November 12, 2025
₹4 கோடிக்கு கார் வாங்கிய அர்ஷ்தீப்!

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், மெர்சிடஸ் பென்ஸ் AMG G63 Wagon மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். 585 குதிரை திறன் கொண்ட இந்த காரின் விலை ₹4 கோடியாகும். இது, 0-100 kmph வேகத்தை வெறும் 4.3 விநாடிகளில் எட்டும். அர்ஷ்தீப்பின் பவுலிங் வேகத்தை போன்றே காரை வாங்கியுள்ளதாக, நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
ஏழுமலையான் பக்தர்களுக்கு மெகா அன்னதானம்: அம்பானி

திருப்பதியில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் வகையில், அதிநவீன சமையல் கூடத்தை அமைத்து தர உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான, ஊட்டச்சத்து மிகுந்த பிரசாதத்தை வழங்க தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
இந்தியாவின் துயரத்தில் பங்கேற்ற நாடுகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. 12 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த துயரமான தருணத்தில் இந்தியாவுடன் நிற்பதாக பல உலக நாடுகள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் இஸ்ரேல், இலங்கை, மலேசியா, அயர்லாந்து, சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன.
News November 12, 2025
போகும் போது எதையும் கொண்டு போக முடியாது..

நடிகர் அபிநய்யின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. உங்களிடம் பணம் இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். போகும் போது என்னங்க கொண்டுபோக போறோம். நம்மால் எதையும் எடுத்துட்டு போக முடியாது. ஒரு பானையில் ஒரு பிடி சாம்பலுடன் நமது வாழ்க்கை முடிந்துவிடும். அதனால், உயிருடன் இருக்கும் போது பிறருக்கு உதவுங்கள் என்று அவர் கூறுகிறார். உண்மையும் அதுதானே. #RIP


