News June 6, 2024

பங்குச்சந்தையில் ₹38 லட்சம் கோடி ஊழல்: ராகுல்

image

திணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு விவரங்கள், பாஜக தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக்கணிப்புகளை வைத்து பங்குச்சந்தையில் ₹38 லட்சம் கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 8, 2025

Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

image

<<17339750>>பதில்கள்<<>>:
1. 206 எலும்புகள்.
2. காரைக்குடியில் உள்ள கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ளது.
3. ஆல மரம்.
4. 1967
5. Chloroplasts.
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

News August 8, 2025

SK-வின் 2 புதிய படங்களுக்கு இசையமைக்கும் சாய்

image

‘பராசக்தி’, ‘மதராஸி’ படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த 2 படங்களுக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 படங்களையும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

News August 8, 2025

11-ம் வகுப்புக்கு நடப்பாண்டு பொதுத்தேர்வு இல்லை: TN அரசு

image

TN அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே தொடரும் என்றும் கூறியுள்ளது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், அதனை மாநில அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!