News September 19, 2025
₹36 கோடி வருமான வரி: ஜெ.தீபா வழக்கு தள்ளுபடி

ExCM ஜெயலலிதா செலுத்த வேண்டிய ₹36 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தக் கோரி, ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில், வரித் தொகையை ₹13 கோடியாக குறைத்துவிட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

HDFC, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ், பேங்க் ஆக் இந்தியா, கரூர் வைஸ்யா ஆகியவை கடன்களுக்கான MCLR(marginal cost of funds based lending rate) விகிதங்களை 5 முதல் 15 புள்ளிகள் வரை குறைத்துள்ளன. இது இந்த மாதம் முதலே அமலானதால், கடன் வாங்கியவர்களுக்கு அடுத்த EMI தொகை குறையும். வீட்டுக் கடன் போன்ற நீண்ட கால கடன் பெற்றவர்கள் இதனால் பெரியளவில் பயனடைவர். SHARE IT.
News September 19, 2025
குடும்பத்திற்காக பாஜகவுடன் EPS கூட்டணி: திமுக

தனது குடும்பத்தையும், சொந்தங்களையும் காப்பாற்றுவதற்காக EPS பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகளை புறந்தள்ளிவிட்டு, சொந்த நலனுக்காக EPS கூட்டணி அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், EPS-க்கு திராவிடத்தை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் அவர் சாடியுள்ளார்.
News September 19, 2025
அரசியல் பேசுறத விட்டுடுறேன்: திமுகவுக்கு சீமான் சவால்!

வரும் தேர்தலில், திமுக தனித்து நின்று 8% வாக்குகளை பெற்றுவிட்டால், நான் அரசியல் பேசுவதையே விட்டுவிடுகிறேன் என்று சீமான் சவால் விட்டிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக + கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் சுமார் 36%-ஆக இருந்தது. இதில் திமுகவின் வாக்குவங்கி 25% இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சீமான் இப்படி சவால் விட்டுள்ளதற்கு என்ன காரணமாக இருக்கும்?