News October 8, 2025

Sanitation Workers உயிரிழந்தால் ₹35 லட்சம் இழப்பீடு: UP CM

image

உ.பி.,யில் தூய்மை பணியாளர்கள் விபத்திலோ (அ) எதிர்பாராத விதமாகவோ உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ₹35 – ₹40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என CM யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்துடன், ₹5 லட்சம் காப்பீடும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில், பணியின்போது தூய்மை பணியாளர் உயிரிழந்த நிலையில் ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 8, 2025

மல்யுத்த சாம்பியன் அமன் ஷெராவத் இடைநீக்கம்

image

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்தை இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், 57 கிலோ எடைப்பிரிவில் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.7 கிலோ எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, அமன் ஷெராவத் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி மல்யுத்த சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News October 8, 2025

மத்திய அரசு பள்ளிகளில் 7,267 காலிபணியிடங்கள்..

image

கல்வி அமைச்சகத்தில் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர், ஸ்டாப் நர்ஸ், ஹாஸ்டல் வார்டன் பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும். கல்வி தகுதி: 10-ம் வகுப்பு முதல் துறை சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் https://nests.tribal.gov.in/ தளத்தில் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

News October 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 482 ▶குறள்: பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. ▶பொருள்: காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

error: Content is protected !!