News February 25, 2025
₹3,252 கோடி நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: அமைச்சர்

100 நாள் வேலைத்திட்டத்திற்கான ₹3,252 கோடி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பெரியசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நிதி விடுவிப்பதைத் தாமதித்தால், திட்ட பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியாமல் போவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊதிய நிலுவை ₹2,400 கோடியாகவும், உட்கட்டமைப்பு நிலுவை ₹852 கோடியாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
AUS-SA போட்டி கைவிடப்பட்டது

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி மைதானம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
News February 25, 2025
தற்காலிக பணியாளர்களை நீக்க உத்தரவு

2020க்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் மேல்முறையீட்டு வழக்கில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News February 25, 2025
நீங்கள் சிகரெட் பிடிப்பவரா?

புகை பிடிப்பதால் கேன்சர் வரும் என சிகரெட் பெட்டிகளில் போட்டிருந்தாலும், நமது மக்கள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். இருப்பினும் புகை பிடிப்பது எலும்புகளையும் பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எளிமையாக உடையும் அளவிற்கு எலும்பின் வலிமையை புகைப்பழக்கம் குறைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எலும்பு உருவாவதற்கு காரணமான ஹார்மோன்களையும் அது சிதைப்பதாகவும் கூறுகின்றனர்.