News February 5, 2026

₹30,000 சம்பளம்.. 10th தகுதி போதும்

image

சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில்(HVF) காலியாக உள்ள 220 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷாட் பிளஸ்டர், மெஷினிஸ்ட், மெட்டீரியல் ஹேன்ட்லிங் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, ITI கல்வித் தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேடு தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். பிப்.14-க்குள் avnl.co.in தளத்தில் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹30,000 வழங்கப்படும்.

Similar News

News February 13, 2026

மகளிரின் வங்கிக் கணக்கில் முன்பே ₹5,000.. எதற்கு?

image

₹5,000 முன்கூட்டியே வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மே மாதம் வரை மட்டுமே ஆட்சிக்கான அதிகாரம் இருப்பதால், அடுத்த 3 மாதங்களுக்கு சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. மேலும், இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாலும், நாளை (14-ம் தேதி) 2-வது சனி & பிப்.15 ஞாயிறு என்பதாலும் இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளதாம்.

News February 13, 2026

மகளிருக்கு ₹5,000.. CM-ன் Patchwork வேலை: EPS

image

மகளிருக்கு ₹2,000 என தான் அறிவித்ததும் தேர்தல் பயத்தில் CM அதே அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என EPS விமர்சித்துள்ளார். எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாக TN-ஐ சீர்குலைத்துவிட்டதாக கூறிய அவர், தற்போது பணத்தை வரவு வைக்கும் இந்த Patchwork வேலையை பெண்கள் நம்பி விடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அனைத்து பெண்களுக்கும் ₹2,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

News February 13, 2026

வெள்ளி விலை ஒரே நாளில் ₹20,000 குறைந்தது

image

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹20,000 குறைந்து ₹2.8 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இந்த வார தொடக்கத்தில் இருந்தே மாற்றம் ஏதுமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று திடீர் மாற்றம் கண்டுள்ளது.

error: Content is protected !!