News August 15, 2025
₹3,000 டோல்கேட் FAStag பாஸ் இன்று அமலுக்கு வருகிறது

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் எவ்வித கட்டணமுமின்றி பயணிக்கலாம். Rajmarg Yatra செயலியில் PASS வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.
Similar News
News March 6, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்தது

<<19309113>>தங்கத்தை<<>> போன்றே வெள்ளி விலையும் இன்று (மார்ச் 6) குறைந்துள்ளது. 1 கிராம் ₹5 குறைந்து ₹290-க்கும், 1 கிலோ ₹5,000 குறைந்து ₹2.9 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைவதால் வரும் நாள்களிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 6, 2026
BREAKING: ₹7,500 ஆக உயர்த்தி ஸ்டாலின் அறிவித்தார்

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியத்தை ₹6,250-லிருந்து ₹7,500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், ஓராண்டு பணிமுடிந்த விற்பனையாளருக்கான சம்பள வரம்பு ₹8,600 – ₹29,000-லிருந்து ₹9,000 – ₹39,600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 26,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.
News March 6, 2026
ALERT இனி போன்ல ‘ஹலோ’ சொல்லாதீங்க..

Unknown நம்பரில் இருந்து வரும் Call-ஐ Attend செய்தவுடன், எதிர்முனையில் பேசாத வரை நீங்கள் Hello சொல்லாதீர்கள். எதிரில் இருக்கும் Scammers அந்த Hello-வை ரெக்கார்ட் செய்து, AI மூலம் உங்கள் குரலை குளோனிங் செய்கின்றனர். இதைவைத்து நீங்கள் பேசுவது போல பேசி, உங்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து பணம் பறிக்கலாம். எனவே, உங்களுக்கு போன் செய்யும் நபர் பேசிய பின், நீங்கள் பேசத்தொடங்குங்கள். SHARE IT.


