News August 27, 2025
குடும்பத்திற்கு ₹3,000.. CM ஸ்டாலின் அதிரடி முடிவு

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
Similar News
News August 27, 2025
பிஹாரில் பாஜகவின் அகம்பாவம் புதைக்கப்படும்: CM

இந்திய ஜனநாயக போரின் மையப்பகுதியாக பிஹார் உருவெடுத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்காளர்களை நீக்கியோ, நிறுவனங்களை கையகப்படுத்தியோ மக்களின் வலிமையை பாஜகவால் நசுக்க முடியாது எனவும், INDIA கூட்டணி பிறந்த பிஹார் மண்ணில் பாஜகவின் அகம்பாவம் புதைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், இந்திய ஜனநாயகத்தின் அடுத்த அத்தியாயத்தை ஒளிரச் செய்யும் ஃப்ஜ்ஃப்க்ஃப்ஃப்
News August 27, 2025
சட்டம் அறிவோம்: பஸ்ஸில் இந்த பிரச்னை வந்தால்..

பஸ்ஸில் AC டிக்கெட் புக் செய்துவிட்டு, AC வேலை செய்யவில்லை, சீட் சரியாக இல்லை, சுத்தமாக இல்லை என எந்த புகாராக இருந்தாலும் சட்டப்படி நிவாரணம் கிடைக்கும். முதலில் பிரச்னையை பஸ் டிரைவரிடம் கூறுங்கள். அவர் முரணாக பதிலளித்தால், பஸ் நிறுவனத்திடம் புகாரளியுங்கள். அவர்களும் முரண்டு பிடித்தால், வீடியோ ஆதாரத்துடன் வழக்கு தொடுக்கலாம். வழக்கின் செலவுடன் சேர்த்து நிவாரணம் அளிக்கப்படும். SHARE IT.
News August 27, 2025
தமிழக பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப்.5-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். பின்னர், செப்.6(சனிக்கிழமை), செப்.7(ஞாயிற்றுக்கிழமை) என 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப். 2-வது வாரத்தில் <<17524777>>காலாண்டு தேர்வு<<>> என்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இந்த தொடர் விடுமுறை பயனுள்ள வகையில் அமையும்.