News August 10, 2025

ஆக.15 முதல் ₹3,000 பாஸ் அமல்.. ரெடியா இருங்க!

image

ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி நாடு முழுதும் பயணிக்கும் புதிய, ‘FASTAG’ நடைமுறை வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த பாஸ், ஆக்டிவேட் செய்யப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு (அ) 200 முறை பயணிக்கலாம். வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கான இத்திட்டத்தில் கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம். வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸை ‘<>ராஜ்மார்க் யாத்ரா<<>>’வில் பெறலாம். SHARE IT.

Similar News

News August 10, 2025

VIRAL: இதுக்கு பெயர்தான் லக்!

image

நமக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை ஒருமுறையாவது பார்த்து விட மாட்டோமா? என தவம் கிடப்போம்! ஆனால், ஒருவருக்கு கோலியும், ஏ பி டிவில்லியர்ஸும் போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். சத்தீஸ்கரை சேர்ந்த மணிஷ், புதிதாக வாங்கிய சிம், ரஜத் பட்டிதரின் பழைய நம்பர். அந்த நம்பரில் தான், கோலியும், ABD-யும் போன் செய்துள்ளனர். விஷயமறிந்து படிதர் போலீசில் புகார் அளிக்க, அந்நபர் சிம்மை திருப்பி கொடுத்துள்ளார்.

News August 10, 2025

கூலி ரிலீஸ்.. ஆபிசுக்கு லீவு விட்ட ‘குட்’ கம்பெனி

image

‘கூலி’ பட ரிலீசுக்கு இன்னும் 4 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், என்ன சொல்லி ஆபிசில் லீவு போடுவது என ஒரு கூட்டம் தவித்து வருகிறது. இந்த நிலையில்தான், பலரும் விண்ணப்பிக்க மதுரையைச் சேர்ந்த ‘Uno aqua care’ நிறுவனம், 14-ம் தேதி கம்பெனிக்கு லீவு விட்டுள்ளது. Official-ஆக ‘ரஜினிகாந்த் வாழ்க’ என குறிப்பிட்டு, லெட்டரும் வெளியிட்டுள்ளது. நம்ப கம்பெனியும் லீவு கொடுத்தா நல்லா இருக்கும்’ல?

News August 10, 2025

கடன் EMI குறைகிறது.. HDFC வங்கி புதிய அறிவிப்பு

image

இந்தியாவின் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC, தனது நிதியாதார செலவு அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR)குறைத்துள்ளது. பெரும்பாலான கடன் தவணைகளின் MCLR விகிதம் 0.05% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கான தவணைத் தொகை குறைய இருப்பதால் லட்சக்கணக்கானோர் பயனடைவர். நீங்கள் HDFC வங்கியில் கடன் வாங்கி இருந்தால், அடுத்த தவணை தானாகவே குறைந்துவிடும்.

error: Content is protected !!