News December 23, 2025
₹3.62 லட்சம் கோடி கொடுக்க முன்வந்த எல்லிசன்

Warner Bros Discovery-ஐ கையகப்படுத்த கடைசி முயற்சியை பாரமௌண்ட் எடுத்துள்ளது. அந்நிறுவனத்திற்கு ₹3.62 லட்சம் கோடிக்கு உத்தரவாதம் தருவதாக Oracle இணை நிறுவனர் லாரி எல்லிசன் அறிவித்துள்ளார். முன்னதாக, லாரி எல்லிசன் உதவியோடு ₹9.71 லட்சம் கோடி தருவதாக பாரமௌண்ட் கூறியிருந்தது. ஆனால், இதன் நிதி ஆதாரங்கள் தெளிவற்றவை, எல்லிசன் உத்தரவாதம் அளிக்கவில்லை எனக் கூறி இந்த சலுகையை <<18483053>>Warner Bros<<>> நிராகரித்தது.
Similar News
News February 8, 2026
இனி சேப்பாக்கத்தில் விசில் போட முடியாது

NZ, AGF இடையேயான உலகக் கோப்பை போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. விசிலுக்கான தடை குறித்து ICC, BCCI தரப்பில் எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 8, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு HAPPY NEWS

<<19007011>>கல்விக் கடன், மாற்றுத் திறனாளி கடன்<<>> போன்றவை தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலைப்போல், இப்போதும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான நடவடிக்கையை திமுக அரசு தொடங்கிவிட்டதாம். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகைக் கடன் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் நல்ல செய்தி வெளியாகும்.
News February 8, 2026
EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி!

டாடா மோட்டார்ஸ் தனது EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக TATA Curvv மாடலுக்கு, வேரியண்ட்களை பொறுத்து ₹3.80 லட்சம் – ₹3.30 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் Harrier (₹1.5 லட்சம்), Punch (₹1.6 லட்சம்), Tiago (₹1.5 லட்சம்), மற்றும் Nexon (₹1.2 லட்சம்) ஆகிய மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


