News March 27, 2025
போன்களால் ₹250 கோடி பணம் கண்டுபிடிப்பு: நிர்மலா

சமூக வலைதளங்கள், மொபைல் போன்களில் ஆய்வு செய்ததன் மூலம் கணக்கில் வராத ₹250 கோடியை கண்டறிய முடிந்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே டிஜிட்டல் தரவுகளை ஆராய்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், வரி செலுத்துவோரின் இமெயில், சமூக வலைதளங்களை ஆராய அதிகாரிகளுக்கு உரிமை வழங்கும் புதிய வருமான வரி மசோதாவிற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் இப்படி பேசியிருக்கிறார்.
Similar News
News March 30, 2025
இணையத்தில் கசிந்த நடிகையின் புதிய வீடியோ?

சில நாள்கள் முன்பு, ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகையின் ‘பிரைவேட்’ வீடியோ எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலானது. அது மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ என சம்மந்தப்பட்ட நடிகை தரப்பிலிருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த வீடியோ எனக் குறிப்பிட்டு, அவரது முக சாயலில் புதிய வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவும் போலியா (அ) உண்மையா எனத் தெரியவில்லை. பெண்கள் ஜாக்கிரதை..!
News March 30, 2025
படத்திற்கு தேவை; பாடத்திற்கு வேண்டாமா? தமிழிசை கேள்வி

விஜய் நடிக்கும் படங்களுக்கு மட்டும் பல மொழிகள் வேண்டும், மாணவர்கள் படிக்கும் பாடங்களுக்கு மும்மொழிகள் வேண்டாமா எனத் தமிழிசை வினவியுள்ளார். பொதுக்குழு மேடையில் பிரதமர் மோடியை விமர்சித்த விஜய்யை கடுமையாகச் சாடிய அவர், தம்பி விஜய் நிறைய அரசியல் பாடங்களைக் கற்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அரசியல் மேடையில் சினிமாவில் பேசுவதுபோல் பேசினால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
News March 30, 2025
மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம்

பிற்பகல் (12 -3 மணி வரை) நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வெளியே வராமல், வீட்டிலேயே இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சு. கேட்டுக்கொண்டார். வெயில் காலத்தில் தர்ப்பூசணி நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் என்றும் இந்த பழத்தை உட்கொள்வது நல்லது என்றாலும், தீய நோக்கம் கொண்டவர்கள், கலப்படம் செய்வதாகவும் கூறினார். இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.