News December 8, 2024

திருடுபோன நடிகையின் செருப்புக்கு ₹237 கோடியா?

image

திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் பயன்படுத்திய பல பொருட்கள் கோடிகளில் ஏலம் போகிறது. நடிகையின் திருடு போன ஒரு ஜோடி செருப்பு ₹237 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதனை ஹாலிவுட்டின் பிரபல ‘The Wizard of Oz’ படத்தில் நாயகி ஜூடி ஜெரால்ட் அணிந்திருப்பார். இந்த செருப்புகள் 2005ல் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து 2018ல் ஆண்டு FBIயால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 12, 2025

ACயால் மின் கட்டணம் உயர்கிறதா?

image

வீட்டில் குளுகுளுவென ஏசியில் இருக்க வேண்டும் என ஆசைப்படும் மக்கள் மின் கட்டணம் வரும் போது ஷாக் ஆவது வழக்கம்தான். ஆனால், சில டிரிக்ஸ் மூலம் மின் கட்டணம் அதிகரிப்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். மின் கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பதை போட்டோஸாக மேலே தொகுத்துள்ளோம், ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

News September 12, 2025

இன்றே கடைசி: மாத சம்பளம் ₹29,500

image

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 515 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஐடிஐ படித்த, 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC-க்கு 3, SC/ST-க்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ₹29,500 முதல் ₹65,000 வரை. எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News September 12, 2025

ரோஹித்தை பார்த்து கிரிக்கெட் கற்றேன்: ஜித்தேஷ் நெகிழ்ச்சி

image

உள்ளூர் மற்றும் IPL போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அசத்திய ஜித்தேஷ் சர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், தனது முதல் பயிற்சியாளர் யூடியூப் என்றும், அதை பார்த்துதான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன் எனவும் ஜித்தேஷ் தெரிவித்தார். சிறுவயதில் ரோஹித்தின் வீடியோக்களை அதிகம் பார்ப்பேன் என கூறிய ஜித்தேஷ், ஆட்ட நுணுக்கங்களை அவரிடம் இருந்து தெரிந்துகொண்டதாகவும் கூறினார்.

error: Content is protected !!