News September 9, 2025
₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் கிடைக்கும் திட்டம்!

பெரிய ரிஸ்க் இல்லாத சிறிய முதலீடுகள் அல்லது சேமிப்புகளுக்கு அஞ்சலக RD ஒரு சிறந்த திட்டம். இதில் தினமும் ₹222 சேமித்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் ₹4.5 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதனை நீட்டித்தால் ₹11 லட்சம் வரை பெறலாம். இந்த கணக்கை தொடங்க, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE.
Similar News
News September 9, 2025
துணை ஜனாதிபதியின் பணிகள்

ஜனாதிபதிக்கு அடுத்து 2-வது உயரிய அரசமைப்பு பதவி துணை ஜனாதிபதி பதவிதான். ராஜ்யசபாவிற்கு தலைவராக அவையை வழிநடத்துவது இவரின் பொறுப்பு. பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கு திடீர் மரணம் ஏற்பட்டால், அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை (அதிகபட்சம் 6 மாதங்களுக்கு) அவரின் பணிகளையும் துணை ஜனாதிபதியே மேற்கொள்வார். உங்களுக்கு ஒன்று தெரியுமா? துணை ஜனாதிபதி பதவிக்கு சம்பளம் கிடையாது.
News September 9, 2025
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா கவர்னராக உள்ளார். கோவை தொகுதியில் 1998 முதல் 2004 வரை MP-யாக இருந்த இவர், 2003 – 2006 வரை TN பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், 2004, 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் கோவையில் களமிறங்கியவர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக நின்று, வெற்றி பெற்றுள்ளார்.
News September 9, 2025
எம்பி to துணை ஜனாதிபதி

சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் (எ) சி.பி.ராதாகிருஷ்ணன், அக்.20, 1957-ல் பிறந்தார். இளம் வயதிலேயே சமூகப் பணியில் ஆர்வம் கொண்டவர், RSS, ஜனசங்கத்தில் உறுப்பினர். 1998-ல் கோவை எம்பியானார். முன்னாள் PM வாஜ்பாயுடன் நட்புறவில் இருந்தவர். 2004-07இல் TN பாஜக தலைவராக இருந்தார். அப்போது 19,000 கிமீ ரத யாத்திரை நடத்தினார். 3 மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தவர் தற்போது துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ளார்.