News August 6, 2025

இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 மானியம்: TN அரசு

image

உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும் என்று TN அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உணவு டெலிவிரி பணியில் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலன் காக்கும் வகையில், முதற்கட்டமாக 50 ஆயிரம் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்பட்டது. அதேபோல், முதற்கட்டமாக 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Similar News

News August 6, 2025

தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

image

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி நாளை(ஆக.7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

ஜேம்ஸ் கேம்ரூனின் அடுத்த பிரமாண்ட படைப்பு

image

அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து ‘Last Train From Hiroshima’, ‘Ghosts of Hiroshima’ ஆகிய இரு புத்தகங்கள் வெளியாகின. இந்த 2 புத்தகங்களை அடிப்படையாக வைத்து டைட்டானிக், அவதார் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவதாரின் மீதமுள்ள பாகங்கள் வெளியான பின் இப்படம் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

News August 6, 2025

4.08 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் ரத்து

image

மானியத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க மத்திய அரசு 4.08 கோடி சமையல் எரிவாயு(LPG) இணைப்புகளை ரத்து செய்துள்ளது. வணிக நோக்கங்களுக்காக மானிய விலையில் LPG இணைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் பூரி ராஜ்யசபாவில் தெரிவித்தார். போலி கணக்குகளைக் கண்டறிவதில் டிபிடிஎல் திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளதாவும் அமைச்சர் கூறினார்.

error: Content is protected !!