News September 3, 2025

தீபாவளிக்கு ₹20,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

மின் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ₹10,000-ல் இருந்து ₹20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மின்வாரிய ஊழியர்களுக்கு முன்பணத்தை உயர்த்துவது குறித்து வாரியக் குழு ஆலோசனை நடத்தியது. அதில், ₹20,000 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு துறைக்கும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Similar News

News September 5, 2025

அரசு கல்லூரி: விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்

image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20-ல் தொடங்கியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வகுப்புகள் துவங்கிய நிலையில், பல்வேறு சூழல்களால் யாரேனும் விண்ணப்பிக்க தவறியிருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News September 5, 2025

வெள்ளிக்கிழமையில் துர்க்கையின் அருளை பெற

image

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
பொருள்:
காத்யாயனியின்(மகாதேவி) மகள் தெய்வத்தை நான் தியானிக்கிறேன்!
ஓ, துர்கா தேவி எனக்கு உயர்ந்த புத்தியைக் கொடுத்தார்!
என் மனதை ஒளிரச் செய்வாயாக! SHARE IT.

News September 5, 2025

FB, Insta உள்பட 26 செயலிகளுக்கு தடை

image

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், X உள்பட 26 சோஷியல் மீடியா செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. சோஷியல் மீடியாக்கள், சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவதை நோக்கமாக கொண்டு சமீபத்தில் அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியது. இதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசிடம் முறையாக பதிவு செய்யாத செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், டிக்டாக் செயலி பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு தடை இல்லை.

error: Content is protected !!