News October 6, 2025
ஒரே நாளில் ₹2,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்டது

தங்கம் விலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வெள்ளி விலையும் கடும் உயர்வை சந்தித்து வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று <<17930560>>சவரனுக்கு ₹1400<<>> அதிகரித்த நிலையில், பார் வெள்ளி கிலோ ₹2,000 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது, ஒரு கிராம் வெள்ளி ₹167-க்கும் ஒரு கிலோ ₹1.67 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படியே போனா வெள்ளி வாங்குறது கஷ்டம்தான் போல..!
Similar News
News October 6, 2025
பெட்ரோல்: எந்த நாட்டில் எவ்வளவு?

பெட்ரோல் விலையை கேட்டாலே பலரும் அலறுகின்றனர். ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு விலை என்று புலம்புகின்றனர். பிற நாடுகளில் எவ்வளவு விலை என்று தெரியுமா? அதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. 1 லிட்டர் பெட்ரோலின் விலை. இந்திய மதிப்பில் எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எங்கே விலை அதிகம்? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 6, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தனர்

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இபிஎஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டபோது, 100-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை, கட்சி துண்டு அணிவித்து இபிஎஸ் வரவேற்றார். இதில், தருமபுரி திமுக மாவட்ட நிர்வாகிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 6, 2025
பயிற்சியை தொடங்கிய ஹிட்மேன்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா பயிற்சியை தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ODI தொடரில் அவர் இடம்பெற்றுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள BCCI சிறப்பு மையத்தில் (CoE) அவர் தீவிரமாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 10 வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதேபோல், ஜிம்மிலும் உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.