News September 6, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

2023 அக்டோபர் முதல் வங்கிகளில் ₹2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது நிறுத்தப்பட்டது. ஆனால், புழக்கத்தில் இருந்தவற்றில் ₹5,956 கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வரவில்லை என RBI தெரிவித்துள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். சென்னை RBI அலுவலகம் சென்றால் பணம் அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்படும். தபால் நிலையத்திலும் மாற்றலாம்.
Similar News
News March 25, 2026
சென்னை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News March 25, 2026
போரை நிறுத்த ஈரான் வைக்கும் டிமாண்ட்

USA உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சில நிபந்தனைகள் விதித்துள்ளதாம். ➤வளைகுடாவில் உள்ள USA தளங்களை மூடவேண்டும் ➤போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு ➤ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிக்கும் ➤ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும். மேலும், தனது ஏவுகணை திட்டத்தை கைவிட முடியாது என்றும், ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் தாக்கக் கூடாது என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
News March 25, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 உயர்ந்தது!

<<19470679>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹260-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹2,60,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை இன்று மட்டும் 6% உயர்ந்துள்ளதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


