News September 17, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. உடனே இதை பண்ணுங்க!

தீபாவளி பரிசாக PM KISAN தவணைத் தொகை ₹2,000-ஐ அடுத்த மாதமே வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், 2019 பிப்.1-க்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகள் மற்றும் ஒரே குடும்பத்தில் பல பயனாளிகள் இருந்தால் வெரிஃபிகேஷன் முடியும் வரை அவர்களுக்கு பணம் கிடைக்காது. PM KISAN வலைத்தளம் (அ) செயலியில் ‘Know Your Status’ சென்று தங்கள் தகுதி நிலையை சரிபார்க்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. SHARE IT.
Similar News
News September 17, 2025
உலக கிரிக்கெட்டின் Don-ஆன இந்தியா!

ODI, T20 கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. அதே போல, T20 பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி, ஆல் ரவுண்டரில் ஹர்திக் ஆகியோர் முறையே முதல் இடத்தில் உள்ளனர். மேலும், டெஸ்ட் பவுலர்களில் பும்ராவும், ஆல் ரவுண்டர்களில் ஜடேஜாவும் முதல் இடத்தில் உள்ளனர். ODI பேட்டிங்கில் கில் நம்பர் 1 வீரராக உள்ளார். கொடி பறக்குதா!
News September 17, 2025
காதலன் இறந்த சோகத்தில் காதலி தற்கொலை

துணை இறந்தால் உயிரை மாய்க்கும் அன்றில் பறவையை போல் தமிழகத்தில் ஒரு காதல் ஜோடி சோக முடிவை எடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே இளைஞர் பூபதி(21), 12-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஜோடிகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதில், மனமுடைந்த பூபதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் இறந்த துக்கம் தாளாமல் அந்த மாணவியும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது சரியா?
News September 17, 2025
SBIயில் கொள்ளை: ₹20 கோடி மதிப்பிலான நகை திருட்டு

கர்நாடகாவின் சடச்சான் SBI வங்கியில் இருந்து 20 கோடி மதிப்புள்ள தங்க நகை, ஒரு கோடி ரொக்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது. ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் நேற்று மாலை அந்த வங்கிக்குள் ஒரு கும்பல் நுழைந்துள்ளது. பதறிப்போன வங்கி ஊழியர்களை, மிரட்டி கழிப்பறையில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் மேலாளரிடம் இருந்து சாவிகளை பறித்த அக்கும்பல், நகை மற்றும் பணத்துடன் மகாராஷ்டிராவுக்கு தப்பியுள்ளனர்.