News October 15, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000.. உடனே இதை பண்ணுங்க

PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹2,000 வீதம் 3 தவணைகளில் ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படுகிறது. இதன் 21-வது தவணை அடுத்த சில நாள்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகவுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த உதவித்தொகை பெற ‘தனித்துவ விவசாய அடையாள அட்டை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனித்துவ விவசாய அடையாள அட்டை இல்லாதவர்கள், உடனடியாக <<18007483>>விண்ணப்பித்து<<>> பெறவும்.
Similar News
News October 15, 2025
தலைக்கு ₹7 கோடி: பயங்கர மாவோயிஸ்ட் சரண்

தலைக்கு ₹7 கோடிக்கும் மேல் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மல்லஜொலு வேணுகோபால் ராவ், தனது 60 போராளிகளுடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா CM பட்னவிஸ் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த மாவோயிஸ்ட்டான வேணுகோபால், 76 CRPF ஜவான்கள் கொல்லப்பட்ட 2010 தண்டேவாடா தாக்குதல் உள்பட பல தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.
News October 15, 2025
இந்திய ஆயுதங்களை வாங்க உலகநாடுகள் ஆர்வம்

ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வான் பலத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது. உள்நாட்டு தயாரிப்பான பினாகா ராக்கெட் ஏவுதளத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ள ஃபிரான்ஸ், இந்தியாவுடன் இணைந்து ஆயுதங்களை உருவாக்க விருப்பமும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு, D4 டிரோன் எதிர்ப்பு அமைப்பு, பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க அர்மீனியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, வியட்நாம், பிரேசில் நாடுகள் விருப்பம் தெரிவித்தன.
News October 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 489 ▶குறள்: எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். ▶பொருள்: கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.