News May 2, 2024
RBI-க்குச் சொந்தமான ₹2,000 கோடி சிக்கியது

ஆந்திராவில் ₹2,000 கோடி கைப்பற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 13ஆம் தேதி அங்குத் தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கஜராம்பள்ளியில் 4 கண்டெய்னர் லாரிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள் அவற்றில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்தப் பணம் RBI-க்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
Similar News
News January 29, 2026
வீட்டுப் பத்திரம் தொலைந்து விட்டதா?

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் பதற வேண்டாம். நகலை பெற முதலில் FIR பதிவு செய்ய வேண்டும்*ஆங்கிலம், பிராந்திய மொழி நாளிதழ்களில் விளம்பரம் கொடுங்கள் *பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் விபரங்கள், FIR நகல், செய்தித்தாள் விளம்பர நகலை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்க வேண்டும் *நகல் பெறுவதற்கான கட்டணத்தை அலுவலகத்தில் Deposit செய்ய வேண்டும்.
News January 29, 2026
தைப்பூசம் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தைப்பூசம், வார விடுமுறை நாள்களையொட்டி, நாளை, நாளை மறுநாள், பிப்.1-ம் தேதி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து 1,205 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முருகன் கோயில்களுக்கு மக்கள் நெரிசலின்றி செல்ல ஏதுவாக கூடுதல் பஸ்களை தமிழக அரசு இயக்குகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். <
News January 29, 2026
நாட்டின் வளர்ச்சி 6.8%-7.2% ஆக இருக்கும்

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சிக்கலான உலக பொருளாதார சூழலில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது என்ற அவர், வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.8%-7.2% ஆக இருக்கும் என கூறியுள்ளார். பொதுவாக, பட்ஜெட்டுக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இதுதான் அரசு என்ன கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


