News June 15, 2024
ஜூன் இறுதிக்குள் ₹2000

விவசாயிகளுக்கான உதவித்தொகை ₹2000 ஜூன் இறுதிக்குள் அல்லது ஜூலை முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. PM கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் 3 தவணையாக ₹6000 வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 17ஆவது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 17ஆவது தவணை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 4, 2026
கார் வாங்க நினைத்தோருக்கு காலையிலேயே மகிழ்ச்சி

ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹1 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News April 4, 2026
போர் நிறுத்தத்தை நிராகரித்ததா ஈரான்?

<<19561558>>USA-வின்<<>> போர் விமானத்தை ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 48 மணி நேர போர் நிறுத்தத்தை USA முன்மொழிந்துள்ளது. ஆனால், அதை ஈரான் நிராகரித்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. USA-ன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ராணுவ அமைப்பு புதிய நவீன கட்டமைப்புகளுடன் இலக்கை நெருங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News April 4, 2026
சூரிய பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, மேஷம், துலாம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு, தொழில், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், திருமண யோகம் கூடி வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜயோகம்தான். நீங்க என்ன ராசி?


