News October 6, 2025
தீபாவளி பரிசாக ₹2,000.. அரசு ஏற்பாடு

PM KISAN திட்டத்தின் 21-வது தவணை தொகையை(₹2,000) தீபாவளிக்கு முன்பே வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், இமாச்சல், உத்தராகண்ட் மாநில விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளோர் KYC அப்டேட் செய்திருந்தால் தீபாவளிக்கு முன்பு பணம் வரவு வைக்கப்படுமாம். அதனால், KYC அப்டேட் செய்யாதவர்கள் <
Similar News
News October 6, 2025
பாஜக நிர்வாகிக்கு எதிராக அண்ணாமலை புகார்

கோவையில் அண்ணாமலையின் பெயரை கூறி விபத்தில் இறந்தவரின் குடும்பத்திடம் இருந்து, பாஜக நிர்வாகி பணம் பறிக்க முயன்றது சர்ச்சையானது. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்றவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தவறு செய்தது பாஜக நிர்வாகியாக இருந்தாலும் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News October 6, 2025
BSNL கஸ்டமர்களுக்கு ஹேப்பி நியூஸ்: வருகிறது 5G

BSNL-ன் அனைத்து 4ஜி டவர்களும், அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் 5ஜி டவர்களாக மாற்றப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதற்காக வெறும் 22 மாதங்களில் 4ஜி டவர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகவும், தற்போது 92,500-க்கும் மேலான டவர்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், BSNL 17 ஆண்டுகளுக்கு பிறகு வருமானம் ஈட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 6, 2025
வைகோ, ராமதாஸை நலம் விசாரித்த சீமான்

சென்னை தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறும் வைகோவை சந்தித்து சீமான் நலம் விசாரித்தார். இதுவரை வைகோவை கடுமையாக விமர்சித்து வந்த அவர், நீண்ட நாள்களுக்கு பிறகு இன்று நேரில் சந்தித்துள்ளார். மேலும், அதே ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸையும் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சளி பிரச்னைக்காக வைகோவும், இதய பரிசோதனைக்காக ராமதாஸும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.