News January 6, 2026
₹2,000 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளில் 98.41% மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ₹5,669 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால், அவற்றை RBI-ன் கிளை அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். 2023 மே மாதத்தில் இருந்து ₹2,000 நோட்டுகளின் புழக்கத்தை RBI நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 5, 2026
விழுப்புரம் அருகே காவல்துறை அதிரடி!

திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் அண்டராயநல்லூர் தென் பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.
News April 5, 2026
OLA EV ஸ்கூட்டர் விலை குறைகிறது!

OLA நிறுவனம் தனது ரோட்ஸ்டர் எக்ஸ்(4.5 kWh) என்ற புதிய EV ஸ்கூட்டருக்கு மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்திற்கான சான்றிதழை பெற்றுள்ளது. இந்தச் சான்றிதழ் மூலம் ஒவ்வொரு வண்டியின் விற்பனை மதிப்பிலும் 18% வரை மானியமாக ஓலா நிறுவனம் பெற முடியும். இதன் மூலம் நிறுவனத்திற்கான உற்பத்திச் செலவு குறையும் என்பதால் இந்த மாடல் ஸ்கூட்டரின் விலை பெரிய அளவில் குறையும் எனக் கூறப்படுகிறது.
News April 5, 2026
வேட்பு மனுவில் வயதை குறைத்த விஜய்

பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் வழக்கு தொடர்பாக முரண்பாடுகள் இருந்தன. இதனால், விஜய் தரப்பில் அவற்றை திருத்தி கூடுதல் பிரமாண பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், விஜய்யின் வயது 51 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் 30-ல் பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயதை 52 என அவர் குறிப்பிட்டிருந்தார்.


